‘தரைப்படை’ படத்துக்காக விமான நிலையம் செட்

‘தரைப்படை’ படத்துக்காக விமான நிலையம் செட்
Updated on
1 min read

சென்னை: ஜீவா, பிரஜின், விஜய் விஷ்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ள படம், ‘தரைப்படை’. ராம்பிரபா இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்டோனக்ஸ் நிறுவனம் சார்பில் பி.பி.வேல்முருகன் தயாரித்துள்ளார். மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள். இது ஒரு கேங்ஸ்டர் கதை. மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் சங்கிலித் தொடர் சந்தைப்படுத்துதல் மூலம் ஒரு மோசடிக் கும்பல், மக்கள் பணத்தை அபகரிக்கிறது. அந்தக் கும்பலிடமிருந்து கேங்ஸ்டர் கும்பல் பணத்தைக் கைப்பற்றி என்ன செய்கிறது என்பது கதை.

இந்தப் படத்துக்காக பிரம்மாண்டமான விமான நிலையம் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கலை இயக்குநர் ரவீந்திரன் இந்த அரங்கை அமைத்தார். படத்தின் முக்கியமான காட்சிகள் அதில் படமாக்கப் பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in