வணங்கான் டப்பிங் பணி தொடக்கம்

வணங்கான் டப்பிங் பணி தொடக்கம்
Updated on
1 min read

பாலா இயக்கத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலானது. தற்போது, இதன் படப்பிடிப்புகள் முடிந்து, டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பூஜையில் இயக்குநர் பாலா, மிஷ்கின், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் விஜய், நடிகர் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in