2-வது திருமணமா? - புள்ளி விவரம் சொன்ன சமந்தா

2-வது திருமணமா? - புள்ளி விவரம் சொன்ன சமந்தா
Updated on
1 min read

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை அழற்சிக்காகச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வரும் அவர், ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? எனக் கேட்டார். அதற்கு, அது தவறான முடிவாகிவிடும் என தெரிவித்த அவர், விவாகரத்து சதவிகிதம் தொடர்பான புள்ளி விவரங்களையும் நகைச்சுவை எமோஜியுடன் பகிர்ந்துள்ளார். அதில், 2023-ம் ஆண்டு நிலவரப்படி, முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவிகிதம் 50 என்றும், 2 மற்றும் 3-வது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து விகிதம் முறையே 67, 73 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்பதைத் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா, நாக சைதன்யாவைக் காதலித்து, 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கருத்துவேறுபாடு காரணமாக 2021-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in