சினிமாவில் என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள்: எம்.எஸ்.பாஸ்கர் தகவல்

சினிமாவில் என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள்: எம்.எஸ்.பாஸ்கர் தகவல்

Published on

இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘மதிமாறன்’. த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கியுள்ளார். ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிக்கிறார். ஆராத்யா, சுதர்ஷன், எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பிரவீன் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசும்போது, “இந்தப் படம் சிறந்த கதையை கொண்ட படம். இயக்குநர் கதை சொன்னபோதே மிகவும் பிடித்திருந்தது. உணர்வுப்பூர்வமாக, எமோஷனலாகத் தான் நிறைய இடங்களில் வசனம் பேசினேன். என்னை மிகவும் கலங்க வைத்தது இந்தப் படம். ஹீரோ வெங்கட் செங்
குட்டுவன் அற்புதமாக நடித்துள்ளார். உயரத்தில் என்ன இருக்கிறது? எனக்கே முடி கொட்டிய பிறகு தான் வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் என்னையும் கிண்டல் செய்துள்ளார்கள். உலகில் சாதனை படைத்த பலர் உருவத்தில் குறைவாக இருந்தவர்கள்தான். அதற்காகக் கவலை படக்கூடாது. இவானா, என் மகளாக நடித்திருக்கிறார்” என்றார்.

தயாரிப்பாளர்கள், கே.ராஜன், நந்தகுமார், சுரேஷ் காமாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in