இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்து சிம்பு நடிப்பில், ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்தது. பிரபு தேவாவை வைத்து அவர் இயக்கிய ‘பகீரா’ படமும் கவனம் பெறவில்லை. இதையடுத்து, அண்மையில் அவரது இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் ரூ.100 கோடி வசூலை குவித்து வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, துல்கல் சல்மான், லெஜண்ட் சரவணன், சுந்தர்.சி, குஷ்பூ உள்ளிட்ட ஏராளமானோர் வருகை தந்த இந்நிகழ்வில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in