

சென்னை: இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட படங்கள், பிரபலங்கள், வெப் சீரிஸ்கள், நிகழ்வுகள் குறித்த விவரங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2023-ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் முதல் இடத்தை ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் பெற்றுள்ளது. டாப் 10 பட்டியல்:
அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்: இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முதலிடம் பிடித்துள்ளார்.
திரையுலகைச் சேர்ந்தவர்களும், விளையாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் என்ற யூடியூபர் 5-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இணைய தொடர்: வெப் சீரிஸ் பட்டியலில் ஷாயித்கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஃபர்சி’ தொடரை அதிகம் பேர் இணையத்தில் தேடியுள்ளனர்.
நிகழ்வுகள்: அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளில், ‘சந்திராயன் 3’ முதலிடத்தில் உள்ளது.
தவிர, இது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டிய பட்டியலில், முதலிடத்தில் ‘ஜி20 மாநாடு’ இடம்பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பொது சிவில் சட்டம் (UCC) இடம்பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் சாட் ஜிபிடி (Chatgpt) நான்காவது இடத்தில் ஹமாஸ் என்றால் என்ன? என்று தேடியுள்ளனர். 5-வது இடத்தில் செப்டம்பர் 28 என்ன நாள் என்பது குறித்து தேடியுள்ளனர்.
அதேபோல, எப்படி (how to) என்பது குறித்த பிரிவில் வெயிலிலிருந்து சருமத்தை பாதுகாப்பது எப்படி?, யூடியூப்பில் 5 ஆயிரம் ஃபாலோவர்ஸ்களை பெறுவது எப்படி?, கபடியில் சிறப்பாக விளையாடுவது எப்படி? கார் மைலேஜ் அதிகரிக்க என்ன செய்யவேண்டும், செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எப்படி என அதிகம் தேடப்பட்டுள்ளது.
கிரிக்கெட்: ஐபிஎல், ஐசிசி உலக கோப்பை, ஆசிய கோப்பை, பெண்கள் ப்ரீமியர் லீக், ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகியவை முறையே முதல் 5 இடங்களிலும், அதிகம் தேடப்பட்ட போட்டிகளில் இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டி முதலிடத்தில் உள்ளது.