

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘கண்ணே கலைமானே’ தொடர் முடிவடைந்ததை அடுத்து ‘சக்திவேல்–தீயாய் ஒரு தீராக்காதல்’ என்ற புதிய மெகா தொடர் இன்று முதல் தொடங்குகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத் தொடர், சுவாரஸ்யமான காதல் நிறைந்த குடும்பக்கதையை கொண்டது.
இதில் பிரவின் ஆதித்யா, அஞ்சலி பாஸ்கர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். மற்றும் கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் மெர்வின், மஹிமா, ரேவதி , ஷாலினி, வாசுதேவன், சாந்தி மாஸ்டர், ஷ்யாம், ரேஷ்மா, சந்தியா, மிதுனம் மணி உட்பட பலர் நடிக்கின்றனர்.
பேராசிரியையான சக்தியை,அதிகாரம் கொண்ட பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த வேலன், காதலிக்கிறான். அவனது காதலை அறியாத சக்தி, அடிக்கடி பிரச்சினையில் சிக்கி, தான் அவனைக் காதலிக்கவில்லை என்பதை நிரூபிக்க தன் குடும்பத்தால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்குச் சம்மதிக்கிறாள். அவளது நிச்சயத்தன்று சக்தியின் மாப்பிள்ளையை வேலன் மிரட்டி திருமணத்தில் இருந்து பின்வாங்கும்படி வற்புறுத்துகிறான். வேலனின் குடும்பத்தினர் சக்தியிடமிருந்து அவனைபிரிக்க முயற்சிக்கின்றனர். பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும். இந்தத் தொடரை சுலைமான் இயக்கியுள்ளார்.