அமீர் vs ஞானவேல்ராஜா | “படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள்” - அமீருக்கு ஆதரவாக சேரன் ட்வீட்

இயக்குநர் சேரன் | கோப்புப்படம்
இயக்குநர் சேரன் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையிலான ‘பருத்திவீரன்’ படம் தொடர்பான பிரச்சினை தான் தீவிரம் அடைந்துள்ளது. அமீர் குறித்து பொதுவெளியில் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்திருந்தார் ஞானவேல்ராஜா. இந்த சூழலில் அமீருக்கு ஆதரவாக இயக்குநர் சேரன், எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

“படைப்பாளிகளின் பாவம் சுமக்காதீர்கள். அமீரின் நேர்மையையும், உண்மையும், நாணயமும் நான் நன்கறிந்தவன் என்ற முறையில் நீங்கள் சொன்ன வார்த்தை முற்றிலும் பொய்யானது. கண்டிக்கிறேன் உங்களை. கார்த்தியும் சூர்யாவும் உங்களை இந்நேரம் உம் தவறை கண்டித்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அமீருக்கு ஆதரவாக சேரன் தெரிவித்தது,
“அமீர்.. மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு.... காலம் நூறு கடந்தாலும் பணமும் புகழும் கண்ணை மறைத்தாலும் அவர்களை உருவாக்கியவன் நீயே.. திமிராய் இரு.. நீயின்றி அவர்களில்லை என்ற கர்வம் மட்டும் போதும்.. உண்மையும் சத்தியமும் வெல்லும். காலம் எல்லா களங்கத்தையும் துடைக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in