சூர்யாவின் ‘கர்ணா’வில் நயன்தாரா?

சூர்யாவின் ‘கர்ணா’வில் நயன்தாரா?
Updated on
1 min read

சென்னை: நடிகர் சூர்யா, ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

இந்நிலையில் பிரபல இந்தி இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் இந்தியில் அறிமுகமாகிறார்.

மகாபாரத கர்ணன் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ‘கர்ணா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சூர்யா, கர்ணனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க வைக்க திஷா பதானி, பிரியங்கா சோப்ரா உட்பட சில நடிகைகளை யோசித்துள்ளனர். இறுதியில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இந்தப் படம் இந்தியில் உருவானாலும் பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. இதற்காக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இருந்தும் நடிகர்களை நடிக்க வைக்க இருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதம் தொடங்குகிறது. எக்சஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in