‘விருமாண்டி’க்கு பிறகு கமல் படத்தில் மீண்டும் இணைந்த அபிராமி

‘விருமாண்டி’க்கு பிறகு கமல் படத்தில் மீண்டும் இணைந்த அபிராமி
Updated on
1 min read

சென்னை: கமலின் ‘விருமாண்டி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் அபிராமி. அதற்கு முன், மிடில்கிளாஸ் மாதவன், சமுத்திரம், சார்லி சாப்ளின் உட்பட பல படங்களில் நடித்திருந்தாலும் ‘விருமாண்டி’ அவருக்குப் புகழைத் தந்தது. தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து வந்த அபிராமி,2004-ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். 2009-ம் ஆண்டு அவருக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் சினிமாவில் நடிக்காமலிருந்த அவர், ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இப்போது கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம், ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ படத்துக்கு பிறகு இருவரும் இணைவதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் அபிராபி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் மூலம் 20 வருடத்துக்குப் பிறகு கமலுடன் அவர் மீண்டும் இணைகிறார். இதை உறுதிப்படுத்தியுள்ள அபிராமி, ஜனவரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in