

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து பேசியது சர்ச்சையானது. அவருக்கு த்ரிஷா தனது கண்டனத்தை தெரிவித்தார். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“மன்சூர் அலிகான் பேசியதை கண்டு நான் மனம் உடைந்தேன். அது என்னை கொதிப்படையவும் செய்துள்ளது. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நாங்கள் அனைவரும் ஒரே அணியாக இணைந்து பணியாற்றியவர்கள். எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், சக கலைஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்குமான மரியாதை சமரசமின்றி வழங்கப்பட வேண்டும்” என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.