

ஏ.ஆர். முருகதாஸ் ‘தர்பார்’ படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கெனவே வெளியானது. இந்தப் படத்தை பான் இந்தியா முறையில் உருவாக்க இருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் வித்யுத் ஜாம்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.