இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு எப்போது? 

இளையராஜா பயோபிக் படப்பிடிப்பு எப்போது? 
Updated on
1 min read

சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார், இசை அமைப்பாளர் இளையராஜா. அவரின் வாழ்க்கை கதையை இயக்க ஆர்வம் இருப்பதாக இயக்குநர் பால்கி எற்கெனவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில் தனுஷ் நடித்தால், ராஜா ரசிகனான அவர் ஆசையை நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இளையராஜா வாழ்க்கைக் கதை திரைப்படமாக இருப்பதை கனெக்ட் மீடியா மற்றும் மெர்க்குரி குழுமம் உறுதி செய்துள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. 2025-ம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். கனெக்ட் மீடியா மற்றும் மெர்க்குரி குழுமம், தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களின் நடிப்பில், சுமார் ரூ.925 கோடி முதலீட்டில், பல மெகா- பட்ஜெட் படங்களைத் தயாரிக்க இருக்கிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in