“அருமையான படைப்பு” - ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்த தனுஷ் கருத்து

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்
Updated on
1 min read

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜிகர்தண்டா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் வெள்ளிக்கிழமை (நவ.10) திரை அரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் படத்தை பார்த்த பின்னர் நடிகர் தனுஷ், படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ளனர். நிமிஷா சஜயன், இளவரசு, சத்யன் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்தேன். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அருமையான படைப்பு. வழக்கம் போலவே அசத்தியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. லாரன்ஸ் அபார நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசை அற்புதம்.இந்தப் படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்கள் இதயங்களை கவரும். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in