மார்வெல் படத்தில் நடிக்க விஜய் பொருத்தமானவர்: சமந்தா

மார்வெல் படத்தில் நடிக்க விஜய் பொருத்தமானவர்: சமந்தா
Updated on
1 min read

ஹாலிவுட் படமான ‘தி மார்வெல்ஸ்’ தீபாவளியை முன்னிட்டு நவ.10-ம் தேதி வெளியாக இருக்கிறது. மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸின் 33 வது படமான இதை, நியா டகோஸ்டா இயக்கியுள்ளார். இதில், ப்ரி லார்சன், டியோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், சியோ-ஜுன் பார்க், ஜாவே அஸ்டன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியாகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தில் வரும் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்துக்கு நடிகை சமந்தா தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமந்தா, “கேப்டன் மார்வெல் எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ. இந்தப் படத்தில் மூன்று சக்திவாய்ந்த சூப்பர் ஹீரோக்கள் தீமைக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளனர்” என்றார். அவரிடம், ‘மார்வெல்’ படத்தில் எந்தெந்த இந்திய நடிகர்கள் இணைந்து நடித்தால் பொருத்தமாக இருக்கும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு, அல்லு அர்ஜுன், விஜய், பிரியங்கா சோப்ரா பொருத்தமாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in