

'அனேகன்' படத்தில் நடிகர் கார்த்திக்கின் நடிப்பைப் பார்த்து வியந்ததாக, இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தனுஷ், அமிரா, கார்த்திக் நடிப்பில் தயாராகி வரும் படம் 'அனேகன்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் நடிகர் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நிறைய படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளாத கார்த்திக் இப்படத்தில் உள்ள பாத்திரத்தின் முக்கியத்துவத்தால் ஒப்புக் கொண்டாராம்.
க்ளைமாக்ஸிற்கு முந்தைய காட்சியில் கார்த்திக் நடிப்பைப் பார்த்து வியந்து விட்டதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், " க்ளைமாக்ஸ்க்கு முந்தைய காட்சியினை எடிட் செய்து பார்த்ததில் கார்த்திக்கின் நடிப்பை பார்த்து வியந்து விட்டேன். கார்த்திக் சார் சிறந்த நடிகர். இவ்வளவு வருடங்கள் எங்கே இருந்தீர்கள் சார்.? அனேகன் படத்தில் நீங்கள் நடித்திருப்பதை பெருமையாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் இப்படத்தினை வெளியிட முடிவு செய்து, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.