

தமிழக அரசு பேருந்துகளின் கட்டணம் சராசரியாக 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு கடந்த 20-ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், இது குறித்து நடிகர் கிருஷ்ணா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள், மாணவர்கள் போராடி வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன்கூட அண்மையில் ட்வீட் செய்திருந்தார்.
அந்த வரிசையில் நடிகர் கிருஷ்ணா தற்போது பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்றைய தினத்துக்கான சிந்தனை: பேருந்து கட்டணத்தை இரட்டிப்பாக்கி விட்டார்களே; உள்குத்து இருக்கிறதா? இருக்கலாம். மெட்ரோ ரயிலில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே... எப்படி அதை உயர்த்துவது எனத் தெரியவில்லை, ஒரே குழப்பமாக இருக்கிறது. யோசிச்சு பார்த்தா கணக்கு சரியா இருக்கும்" என ட்வீட் செய்திருக்கிறார்.