நவீன காதலைச் சொல்லும் ‘காதலே காதலே’

மீனாட்சி கோவிந்தராஜன்
மீனாட்சி கோவிந்தராஜன்
Updated on
1 min read

சென்னை: மஹத் ராகவேந்திரா, மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ‘காதலே காதலே’. ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் இயக்குநர் பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், விடிவி கணேஷ், ரவீனா ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். கே.வி.ஆனந்திடம் பணியாற்றிய ஆர்.பிரேம்நாத் இயக்குகிறார்.

படம்பற்றி அவர் கூறும்போது, “ இளமை பருவத்தில் இருந்து முதுமை வரை தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகக் காதல் இருந்து வருகிறது. இன்றைய நவீன கால காதலை மிக இயல்பாகச் சொல்லும் படம் இது. ஒரு காலத்தில் பார்வையிலேயே காதல் இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும் என்பார்கள். உண்மையான காதல் இன்று இருக்கிறதா? ஒரு பிரச்சினை வந்தால் அவர்கள் ஒன்றாக நிற்கிறார்களா? இல்லையா? தற்போதைய தலைமுறையின் காதல் மற்றும் உறவுகள் பற்றிய கண்ணோட்டம் என்ன என்பதை இந்தப் படம் பேசும். பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று தொடங்குகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in