

சென்னை: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. கடந்த சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வந்தது. ஒருவழியாக இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - 2008ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட பல விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருந்ததால், விதிமுறைகள் எதுவாலும் கட்டுப்படுத்த முடியாத ‘பேஸ்மென்ட்’ என்ற ஒரு குழு உருவாக்கப்படுகிறது. விக்ரம் தலைமையிலான அந்த குழுவில் பார்த்திபன், ராதிகா, சிம்ரன், டிடி, மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் இடம்பெற்றுள்ளனர். பல ஆண்டுகள் தாமதாக வெளியாகியிருந்தாலும், ட்ரெய்லரில் காட்டப்படும் காட்சிகள் ’ரிச்’ ஆகவே இருக்கின்றன. விக்ரம் படு ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் வருகிறார். இத்தனை நடிகர்களுக்கும் அவர்களுக்கான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது இப்போது வரும் படங்களைப் போல சும்மா பெயருக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இயக்குநர் கவுதம் மேனன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ’துருவ நட்சத்திரம்’ ட்ரெய்லர் வீடியோ: