படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
Updated on
1 min read

பொதுவாக தமிழ்த் திரைப்பட சாட்டிலைட் உரிமையை வாங்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தப் படம் வெளியானதிலிருந்து 100 நாட்களுக்குப் பின்னரே அதை ஒளிபரப்புவது வழக்கம்.

ஆனால், வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன.

இது குறித்து ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர், "தமிழ் சினிமா முன்னேறிவிட்டது. வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே பல வெற்றித் திரைப்படங்கள் பொங்கலுக்காக ஒளிபரப்பப்படுகின்றன. பெரிய மாற்றம். : #Mersal #Aramm #TheeranAdhigaaramOndru #Karuppan Plus #Kabali #Bhairava #Vanamagan #MaragathaNanayam வீட்டிலிருந்தே ரசித்து மகிழவும்" என பதிவிட்டிருக்கிறார்.

எந்த சேனலில் என்ன படம்?

விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சன் டிவி: 14-ம் தேதி காலை 11 மணிக்கு நயன்தாரா நடித்துள்ள ‘அறம்’ திரைப்படமும், 15-ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம்’, மாலை 4 மணிக்கு விஜய்யின் ’மெர்சல்’ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன. 15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும்,  4 மணிக்கு ஜெயம் ரவி நடித்த வனமகன் ஆகிய படங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

கலைஞர் டிவி: 14-ம் தேதி காலை 10.30-க்கு அதர்வா நடித்த ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம் வெளியாகிறது. 15-ம் தேதி காலை 10.30-க்கு அஸ்வின், ஸ்வாதி நடிப்பில் வெளியான ‘திரி’ படம்.

பொங்கல் வைத்த கையோடு, சேனல்களை மாற்றி திரைப்படங்களைக் காண்பதற்கு மட்டுமே மக்களுக்கு நேரம் இருக்கும். இதேநிலை தொடர்ந்தால் இனி பொங்கல் என்பது தொலைக்காட்சியை காணும் பொங்கலாகிவிடும் போல் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in