நடிகர் அஜித்குமார் வீட்டின் மதில் சுவர் இடிப்பு 

நடிகர் அஜித்குமார் வீட்டின் மதில் சுவர் இடிப்பு 
Updated on
1 min read

சென்னை: சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டின் மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்குமார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தில் பணியாற்றி வந்த கலை இயக்குநர் மிலன் காலமானார். இந்நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டின் மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

காரணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சில மாதங்களாக சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் பணிகள் செய்து வருகின்றனர்.

இதில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக நடிகர் அஜித்குமார் வீட்டின் முகப்பு வாயிலில் உள்ள மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு மதில் சுவர் இடிக்கப்பட்டதற்கான இழப்பீடும், சிலருக்கு மீண்டும் கட்டித்தரப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in