Published : 21 Oct 2023 05:25 AM
Last Updated : 21 Oct 2023 05:25 AM

தேவ மனோகரி: தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட இளவரசியின் கதை

தமிழ்த் திரைத்துறையின் ஆரம்ப காலகட்டத்தில் ஏவிஎம் யூனிட்டில் ஒருவராக இருந்தவர் ஏ.டி.கிருஷ்ணசாமி (ஏடிகே). பிறகு தனிப்பட்டக் காரணங்களால் அங்கிருந்து விலகி, சில படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். பின்னர் இயக்குநர் ஆனார். சபாபதி (1941), ஸ்ரீவள்ளி (1944), அறிவாளி (1963), மனம் ஒரு குரங்கு (1967) உட்பட சில படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கத்தில் ஹொன்னப்ப பாகவதர், பானுமதி, பி.எஸ்.சரோஜா, எம்.ஆர். சுவாமிநாதன், காளிஎன் ரத்னம், ஆர்.பத்மா, ஜி.எம்.பஷீர், வி.கே.கார்த்திக்கியேன், திருவிதாங்கூர் சகோதரிகளானலலிதா, பத்மினி, ராகிணி உட்பட பலர் நடித்த படம், ‘தேவமனோகரி’.

கன்னடத்தில் இருந்து ‘அம்பிகாபதி’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர்ஹொன்னப்ப பாகவதர். அப்போதுநடிகர்களே பாடி நடிக்க வேண்டும்என்பதால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன. சில படங்களைக் கன்னடத்தில் தயாரித்துள்ளார். பண்டரிபாய், சரோஜாதேவியை அங்குஅறிமுகம் செய்தவர் இவர்தான்.

அந்தக் காலத்திலேயே் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்ட படம் ‘தேவமனோகரி’. தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட இளவரசியை பற்றிய கதை. அவள் மனதை வெல்ல பல இளவரசர்கள் போட்டியிடுகின்றனர். தான் இளவரசன் எனத் தெரியாமல் இருக்கும் ஹொன்னப்ப பாகவதர் மீது தேவமனோகரிக்கு காதல் வருகிறது. பிறகு நாட்டைப் பிடிப்பதில் என்ன பிரச்சினைகள் நடக்கிறது என்பது படம்.

இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாபநாசம்சிவன், அவர் சகோதரர் ராஜகோபா லய்யர், தஞ்சை ராமையா தாஸ் பாடல்கள் எழுதியிருந்தனர். பானுமதியின் தனித்துவமான குரலில் 'இந்திரனோ இவர் சந்திரனோ', ‘சேலைகட்டிய மாதரை நம்பி காலத்தை கழிக்காதே..', ‘மதனா நீ வா’, ஹொன்னப்ப பாகதவரின் தெளிவான குரலில் ‘தாயே பராசக்தியே’ உட்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. ஹொன்னப்ப பாகவதர், பானுமதி ஆகியோரின் நடிப்பும் திருவிதாங்கூர் சகோதரிகளின் நடனமும் பாடல்களும் பேசப்பட்டாலும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1949ம் ஆண்டு இதே நாளில்தான் வெளியானது இந்தப் படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x