கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் கொண்டாட்டம்

கீர்த்தி சுரேஷ் பிறந்த நாள் கொண்டாட்டம்

Published on

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், 'தெறி' பட ரீமேக் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இதில் வருண் தவண் ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் சைரன் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து ரகு தாத்தா மற்றும் ரிவால்வர் ரீட்டா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்கள்.

இந்நிலையில் தனது 31-வதுபிறந்ததினத்தை கீர்த்தி சுரேஷ் நேற்று முன் தினம் கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து்கள் குவிந்தன. இந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், பிரியா அட்லீ, நடிகர் கதிர், 'லியோ' படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஸ், இயக்குநர் அட்லீ உட்பட அவரது திரையுலக நண்பர்கள் கலந்துகொண்டனர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in