சசிகுமார் படத்துக்காக ஈசிஆரில் உருவான கிராமம்!

சசிகுமார் படத்துக்காக ஈசிஆரில் உருவான கிராமம்!
Updated on
1 min read

சென்னை: விஜயகணபதி பிக்சர் சார்பில் பாண்டியன் பரசுராம் தயாரிக்கும் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இதை சத்ய சிவா இயக்குகிறார். இவர், ‘கழுகு’, ‘சவாலே சமாளி’, ‘சிவப்பு’, ‘கழுகு 2’ உட்பட சிலபடங்களை இயக்கியுள்ளார். ‘ஜெய்பீம்’ படத்தில்நடித்த மலையாள நடிகை லிஜோ மோள் ஜோஷ்நாயகியாக நடிக்கிறார். சுதேவ் நாயர், சரவணன், மாளவிகா, போஸ் வெங்கட், மு. ராமசாமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குநர் சத்யசிவா கூறும்போது, “1995-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன் பின்னணியில் உருவாகியுள்ள படம் இது. அது என்ன சம்பவம் என்பதை இப்போது சொல்ல இயலாது. அன்றைய காலகட்டத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதால் பல காட்சிகளை செட் அமைத்து எடுத்தோம். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய கிராமம் ஒன்றை அரங்கம் அமைத்து உருவாக்கினோம். படத்தின் தலைப்பு, டீசர்,டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும். திரில்லர் டிராமா வகை கதையை கொண்ட படம் இது. பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவடைந்துவிட்டது. இன்னும்10 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. அதற்காக கேரளா செல்ல இருக்கிறோம்” என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in