விக்ரம் - ராஜேஷ் எம்.செல்வா இணையும் படம்: கமல் தயாரிக்கிறார்

விக்ரம் - ராஜேஷ் எம்.செல்வா இணையும் படம்: கமல் தயாரிக்கிறார்
Updated on
1 min read

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் கமல்.

'துருவ நட்சத்திரம்', 'சாமி 2' மற்றும் 'மகாவீர் கர்ணா' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். மேலும், 'தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ள படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன், "விக்ரம், அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துகள். புதிதாய்த் தொடங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்" என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கமலிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜேஷ் எம்.செல்வா. 'விஸ்வரூபம்' மற்றும் 'உத்தமவில்லன்' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமன்றி 'தூங்காவனம்' படத்தையும் இயக்கியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in