

சென்னை: நடிகர் சந்தானம், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். சந்தானம் ஜோடியாக டி.வி.நடிகை பிரியாலயா நடிக்கிறார். இந்தப் படம் மூலம் அவர் சினிமாவில் அறிமுகமாகிறார்.
முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்துக்கு ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் இறுதிக் கட்டப் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதன் தலைப்பு, முதல் தோற்றம் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன