திருப்பதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் - வைரல் வீடியோ

திருப்பதியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சாமி தரிசனம் - வைரல் வீடியோ

Published on

திருப்பதி: விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எழுத்தாளர் ரத்னகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தின் வெற்றிக்காக திருப்பதிக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

‘லியோ’ படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு நேற்று அனுமதி அளித்திருந்தது. அதன்படி, ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான அரசாணையில் ‘தளபதி’ விஜய் என குறிப்பிட்டப்பட்டிருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in