இணையத்தில் கவனம் ஈர்க்கும் ரஜினியின் ‘லுக்’!

இணையத்தில் கவனம் ஈர்க்கும் ரஜினியின் ‘லுக்’!
Updated on
1 min read

திருவனந்தபுரம்: நடிகர் ரஜினிகாந்த் புதிய தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ரஜினி 170’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் கேரளாவில் பூஜையுடன் தொடங்கியது. படத்தில் ரஜினிகாந்த் காவல் துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், போலி என்கவுன்டர்களுக்கு எதிராக உருவாகும் இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புக்காக கேரளாவின் திருவனந்தபுரம் சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

காரின் மேற்கூரையின் வழியாக தனது பாணியில் ரசிகர்களுக்கு கையசைத்து வணக்கம் கூறினார் ரஜினி. ஆரஞ்சு சட்டையில், தொப்பி அணிந்திருந்த நடிகர் ரஜினியின் புதிய லுக் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகி வருகிறது.

ரஜினி 170: ‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் லைகா தயாரிக்கும் ‘ரஜினி 170’ படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன், 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அவர் தவிர, ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்ட நடிகர் பட்டாளமே களமிறங்குகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in