அக்.28-ல் கார்த்தியின் ‘ஜப்பான்’ இசை வெளியீடு

அக்.28-ல் கார்த்தியின் ‘ஜப்பான்’ இசை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம், ‘ஜப்பான்’. கார்த்தியின் 25 வது படமான இதில், அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகின்றன. கிரைம் த்ரில்லர் படமான இதை தீபாவளிக்கு வெளியிட இருக்கின்றனர்.

இதற்கிடையே இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, வரும் 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. கார்த்தியின் 25 வது படம் என்பதால், அவர் ரசிகர்களை அழைத்து வந்து பிரம்மாண்ட விழாவாக இதை நடத்த உள்ளனர். இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in