‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்

‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்
Updated on
1 min read

சென்னை: பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார். அவருக்கு வயது 69.

‘என்னம்மா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘லூட்டி’, ‘கஜேந்திரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ரஜினியின் ‘பாபா’ படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தவர். கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த வி.ஏ.துரை மனைவி, மகளை பிரிந்து சென்னை, விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார்.

திரையுலகைச் சேர்ந்த பலரது உதவியால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை செலவுகளை கவனித்து வந்த வி.ஏ.துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்றாட மருத்துவ செலவுகளுக்கே பணமில்லாமல் தவித்து வருவதாக காணொலி வெளியிட்டு உதவி கோரினார். அவருக்கு சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் நிதியுதவி செய்தனர்.

இந்த நிலையில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரித்ததால் அண்மையில் அறுவை சிகிச்சை மூலம் அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் வி.ஏ.துரை நேற்று (அக்.02) இரவு தனது வீட்டில் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in