பிரபுதேவா படக்குழுவுக்கு இலங்கை பிரதமர் பாராட்டு

பிரபுதேவா படக்குழுவுக்கு இலங்கை பிரதமர் பாராட்டு
Updated on
1 min read

பிரபுதேவா நடிக்கும் படம், ‘முசாசி'. ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கும் இதில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, லியோனா லிஷாய், அருள்தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்துக்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார்.‌ ஜாய் ஃபிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதற்காகப் படக்குழுவினர் அங்குச் சென்றுள்ளனர்.

அவர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்தார். அவரை பிரபுதேவா உள்ளிட்ட படக் குழுவினர் நேரில் சந்தித்தனர். அவர், அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in