10 ஆண்டுக்கு பிறகு...

10 ஆண்டுக்கு பிறகு...

Published on

சென்னை: சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ரத்தம்’. கண்ணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் அக். 6-ம் தேதி வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் பங்கேற்றனர். விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய விஜய் ஆண்டனி, "இயக்குநர் அமுதன் என் நண்பர். அவர் அப்பா எனக்கு இசைச் சொல்லிக்கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனால், நான்மியூசிக் கற்றுக் கொள்ளாமலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன் என்பதால் அவருக்கு என் மீது கொஞ்சம் கோபம். அமுதன் கூட இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ரொம்ப நாள்களாக நினைத்தேன். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அது இப்போது கைகூடி இருக்கிறது. அவரை காமெடி பட இயக்குநராகத்தான் உங்களுக்குத் தெரியும். அதைத் தாண்டி அவரின் வேறொரு பரிமாணம் இதில் வெளிப்பட்டிருக்கிறது. நிச்சயம் இப்படம் வெற்றிப் படமாக அமையும்” என்றார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in