‘சந்திரமுகி 2’ பார்த்து ரஜினி பாராட்டியதாக படக்குழு தகவல்

‘சந்திரமுகி 2’ பார்த்து ரஜினி பாராட்டியதாக படக்குழு தகவல்
Updated on
1 min read

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ‘சந்திரமுகி 2’ படத்தை பார்த்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் ரஜினி வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இதனையும் பி.வாசுவே இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டார். அத்துடன் இயக்குநர் பி. வாசு மற்றும் ராகவா லாரன்ஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராட்டும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்’ என்று படக்குழு தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in