நடிகர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்
Updated on
1 min read

சென்னை: ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வெளியாக உள்ளதையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பி.வாசு இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் பாகத்தையும் இயக்குநர் பி.வாசுவே இயக்கியிருக்கிறார். எம்.எம்.கீரவாணி படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ராகவா லாரான்ஸ் இன்று நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள தனது சந்திரமுகி 2 படத்துக்காக ஆசிபெற்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in