

சென்னை: சித்தார்த், நிமிஷா சஜயன் நடித்துள்ள ’சித்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். வரும் 28 அன்று ரிலீஸ் ஆகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி: மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் கதைக்களம் நடக்கிறது. ஆரம்பத்தில் அண்ணன் மகள் மீதான பாசம், நிமிஷா சஜயனுடன் காதல் என அமைதியாக தொடங்கும் ட்ரெய்லர் அடுத்தடுத்து மிகவும் சீரியசாக மாறுகிறது. காணாமல் போன அண்ணன் மகளை தேடி அலைகிறார் சித்தார்த். இந்த தேடலின் இடையே அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காட்டப்படுகின்றன. திபு நினன் தாமஸின் பின்னணி இசை பதைபதைப்பை கூட்டுகிறது. ‘சித்தா’ ட்ரெய்லர் வீடியோ: