“இது முற்றிலும் கேவலமான செயல்” - சாய் பல்லவி காட்டம்

“இது முற்றிலும் கேவலமான செயல்” - சாய் பல்லவி காட்டம்
Updated on
1 min read

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கழுத்தில் ரோஜா மாலைகளுடன் சாய் பல்லவி அருகில் நிற்கும் புகைப்படங்களை க்ராப் செய்து வெளியிட்டு இருவருக்கும் திருமணம் என பரவிய வதந்தி குறித்து நடிகை சாய் பல்லவி காட்டமாக விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “உண்மையாக நான் வதந்திகள் குறித்து கண்டுகொள்வதில்லை. ஆனால், அது குடும்ப நண்பர்களை உள்ளடக்கியிருக்கும்போது அது குறித்து பேசுவேன். என்னுடைய படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை வேண்டுமென்றே க்ராப் செய்து கேவலமான நோக்கத்துக்காகவும், காசுக்காகவும் சிலர் பரப்பியிருக்கிறார்கள்.

எனது வேலை தொடர்பான மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, இப்படியான வேலையில்லாதவர்களின் செயல்களுக்கு விளக்கமளிப்பது வருத்தமளிக்கிறது. இதுபோன்ற அசவுகரியத்தை ஏற்படுத்தும் செயல்கள் முற்றிலும் கேவலமானவை” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘எஸ்கே21’ என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை நிகழ்வில் இருந்த புகைப்படத்தை க்ராப் செய்து ‘சாய் பல்லவிக்கு திருமணம்’ என பரப்பி வந்த நிலையில், சாய் பல்லவி ஆதங்கமாக தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in