

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'லிங்கா' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
ரஜினி, சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'லிங்கா' படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் ரஜினி, இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பட யூனிட்டைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது, "ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். மாவட்ட கலெக்டராக ஒரு வேடம், 1940களில் வரும் காட்சிகளில் ஒரு வேடம் என நடித்துள்ளார். இதை இப்போதைக்கு ரகசியமாக வைத்துள்ளனர்" என்று கூறினார்.
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ஜகபதி பாபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.