திருமண உறவுச் சிக்கல்களும், அன்பின் போதாமையும்! - ‘இறுகப்பற்று’ ட்ரெய்லர் எப்படி?

திருமண உறவுச் சிக்கல்களும், அன்பின் போதாமையும்! - ‘இறுகப்பற்று’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

சென்னை: விக்ரம் பிரபு, விதார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இறுகப்பற்று’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' போன்ற படங்களின் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகியுள்ளார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - படம் திருமணத்துக்குப் பின்னான உறவுச் சிக்கல்களை பேசுகிறது என்பதை ட்ரெய்லர் நிறுவுகிறது. காதலிக்கும்போது இருக்கும் அன்பு திருமணத்துக்குப் பின் தீர்ந்து போவது குறித்து பேசுகிறது. ‘கணவன் மனைவி ரெண்டு பேரும் சண்ட போடுறதுக்கு காரணம் இருக்கணும்னு அவசியமில்ல. அவங்க கணவன் - மனைவியா இருக்குறதே காரணம் தான்’, ‘ரிலேஷன்ஷிப் ரப்பர்பென்ட் மாதிரி ஆளுக்கு ஒருபுறம் இழுக்கும்போது அறுந்துபோகும். சிலபேர் அத தூக்கி போட்ருவாங்க. சிலர் அதை முடிச்சு போட்டு யூஸ் பண்ணுவாங்க’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.

வெவ்வேறு சூழல்களைக் கொண்ட 3 தம்பதிகளின் வாழ்க்கையின் பிரச்சினைகளைக் கொண்டு திருமணத்துக்குப் பின்னான உறவுச் சிக்கல்களை படம் பேசுகிறது. படம் அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in