சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’

சமுத்திரக்கனி நடிக்கும் ‘திரு.மாணிக்கம்’
Updated on
1 min read

சென்னை: நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘திரு.மாணிக்கம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனன்யா இதில் நடிக்கிறார். பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பி ரவிக்குமார், சிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணிக்கம் என்ற மனிதன் எப்படி ‘திரு.மாணிக்க’மாக உயர்கிறான் என்பது இந்தப் படத்தின் கதை என படக்குழுத் தெரிவித்தது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in