தெறிக்கும் தீப்பொறி - விஜய்யின் ‘லியோ’ போஸ்டர்கள் சொல்வது என்ன?

தெறிக்கும் தீப்பொறி - விஜய்யின் ‘லியோ’ போஸ்டர்கள் சொல்வது என்ன?
Updated on
1 min read

சென்னை: விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியான நிலையில் இன்று தமிழ் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டர்கள் எப்படி? - முன்னதாக வெளியான தெலுங்கு போஸ்டரில், ‘KEEP CALM AND AVOID THE BATTLE’ என எழுதப்பட்டிருந்தது. அதற்கு தக்கவாறு சாத்தமான விஜய்யின் படம் கூலான காஷ்மீர் பேக்ரவுண்டில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக வெளியான கன்னட போஸ்டரில் துப்பாக்கிக்குள் விஜய் இருப்பது போன்ற டிசைனில், ‘KEEP CALM AND PLOT YOUR ESCAPE’ என எழுதப்பட்டிருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் தமிழ் போஸ்டரில், ‘KEEP CALM AND PREPARE FOR BATTLE’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் விஜய் ஆக்ரோஷத்துடன் கத்தியை கூர்தீட்ட தீப்பொறி பறக்கிறது. இந்த 3 போஸ்டர்களையும் வரிசையாக அடுக்கிப்பார்த்தால் அது சொல்ல வருவது ஒன்று தான். அமைதியாக இருக்கவும். தப்பிக்க திட்டமிடவும். முடியாத பட்சத்தில் எதிர்த்து நின்று போரிடவும்.

ஆக அமைதியாக இருக்கும் நாயகன், பிரச்சனையிலிருந்து தப்பிக்க நினைத்து பின் எதிர்த்து திருப்பி அடிக்க துணிவதே ‘லியோ’ என்றதை போஸ்டர்கள் மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளன. எனினும் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in