கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா?

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா?
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார், கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக மாமன்னன்’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது, ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா உட்பட சில படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரும் இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுபற்றி கீர்த்தி சுரேஷின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.சுரேஷ் குமார் கூறும்போது, “இது ஆதாரமற்றச் செய்தி. அதில் உண்மையில்லை” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன் தொழிலதிபர் ஒருவரை கீர்த்தி சுரேஷ் மணக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in