அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் வெளியீடு

அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் ‘ரயிலின் ஒலிகள்’ பாடல் வெளியீடு
Updated on
1 min read

சென்னை: அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் ‘ரயிலின் ஒலிகள்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இருவரின் திருமணத்தையொட்டி பாடல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் படம் ‘ப்ளூ ஸ்டார்’. அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் இன்று திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் நடிப்பில் உருவான ‘ரயிலின் ஒலிகள்’ காதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பிரதீப்குமார், சக்திஸ் ரீகோபாலன் இணைந்து பாடியுள்ளனர். உமாதேவி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடல் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in