மீண்டும் ஹீரோவாக யோகிபாபு: தென்காசியில் படப்பிடிப்பு தொடங்கியது

மீண்டும் ஹீரோவாக யோகிபாபு: தென்காசியில் படப்பிடிப்பு தொடங்கியது
Updated on
1 min read

தென்காசி: நடிகர் யோகிபாபு காமெடி வேடங்களில் நடித்து வந்தாலும், கதையின் நாயகனாகவும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் கதையின் நாயகனாக நடித்த ‘லக்கிமேன்’ திரைப்படம் வெளியானது. இப்போது ‘பூமர் அங்கிள்’, ‘ஐகோர்ட் மகாராஜா’, ‘வானவன்’, ராதாமோகன் இயக்கும் ‘சட்னி சாம்பார்’ உட்பட பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை ‘ஆந்திரா மெஸ்’ ஜெய் இயக்குகிறார். இதை 23 பிரேம்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சஞ்சய் ராகவன் மற்றும் ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மது அலெக்சாண்டர் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் பெயர் வைக்கப்படாத இதன் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கி உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in