சி.எஸ்.அமுதனின் ‘ரத்தம்’ ரிலீஸ் தேதி மாற்றம்

சி.எஸ்.அமுதனின் ‘ரத்தம்’ ரிலீஸ் தேதி மாற்றம்
Updated on
1 min read

சென்னை: சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரத்தம்'. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் படம் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அக். 6-ம் தேதி வெளியாகும் என விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in