நடிகர் சங்க பொதுக்குழு: படப்பிடிப்பு ரத்து

நடிகர் சங்க பொதுக்குழு: படப்பிடிப்பு ரத்து
Updated on
1 min read

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க 67-வது பொதுக்குழு கூட்டம், வரும் 10-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சிமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. நடிகர் சங்க கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்தும் பேச இருக்கின்றனர். இந்நிலையில், நடிகர் சங்க வேண்டுகோளை ஏற்று தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பு படப்பிடிப்புகளை அன்று ரத்து செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in