“உதயநிதியின் கருத்துக்கு துணை நிற்கிறேன்” - இயக்குநர் பா.ரஞ்சித்

“உதயநிதியின் கருத்துக்கு துணை நிற்கிறேன்” - இயக்குநர் பா.ரஞ்சித்
Updated on
1 min read

சென்னை: “சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் கருத்துக்கு துணை நிற்கிறேன்” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “அமைச்சர் உதய ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க அழைப்பு விடுக்கும் பேச்சு பல நூற்றாண்டுகளாக சாதி எதிர்ப்பு இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சாதி மற்றும் பாலினத்தின் பெயரால் நிகழும் மனித தன்மையற்ற செயல்களும் தான் சனாதன தர்மத்தில் உள்ளது. புரட்சித் தலைவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், அயோத்திதாஸ் பண்டிதர், தந்தை பெரியார், மகாத்மா பூலே, துறவி ரவிதாஸ் போன்ற ஜாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகள் அனைவரும் தங்கள் சாதி எதிர்ப்பு சித்தாந்தத்தில் இதையே வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சரின் பேச்சை திரித்து இனப்படுகொலைக்கான அழைப்பு என்று தவறாகப் பயன்படுத்தும் கேடுகெட்ட அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது. அமைச்சரின் மீது அதிகரித்து வரும் வெறுப்பும் வேட்டையும் மிகவும் கவலையளிக்கிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற உதயநிதியின் கருத்துக்கு துணை நிற்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in