படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டி கொண்டாடி படக்குழு
படப்பிடிப்பு நிறைவை கேக் வெட்டி கொண்டாடி படக்குழு

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ படப்பிடிப்பு நிறைவு

Published on

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் ‘தீயவர் குலைகள் நடுங்க’. இதில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், 'பிக் பாஸ்' அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, நவநீதன் சுந்தர்ராஜன் வசனம் எழுத,கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கி இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in