“தனி ஒருவன்... பிரபாஸுக்காக தொடங்கிய கதை” - இயக்குநர் மோகன் ராஜா பகிர்வு

“தனி ஒருவன்... பிரபாஸுக்காக தொடங்கிய கதை” - இயக்குநர் மோகன் ராஜா பகிர்வு
Updated on
1 min read

“‘தனியொருவன்’ படத்தை பொறுத்தவரை அது நடிகர் பிரபாஸுக்கான கதையாகத்தான் தொடங்கியது. கதையை நான் பிரபாஸிடம் சொன்னேன்” என இயக்குநர் மோகன் ராஜா பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அப்போது 2015-ம் ஆண்டு நான் பிரபாஸுடன் இணைந்து ஒரு காதல் படம் பண்ணியிருந்தால் என்னுடைய கரியரே வேறொரு பாதைக்கு மாறியிருக்கும். அந்த சமயத்தில் நான் காதல் படத்தை இயக்குவதைக் காட்டிலும் காவல் துறை சம்பந்தமான படங்களை இயக்கலாம் என முடிவெடுத்திருந்தேன். அப்போதுதான் எனக்கு காதல் படங்களைவிட போலீஸ் கதை தொடர்பான படங்களில் எனக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன்.

‘தனியொருவன்’ படத்தை பொறுத்தவரை அது நடிகர் பிரபாஸுக்கான கதையாகத்தான் தொடங்கியது. இதை நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் அப்போது வேறொரு திட்டங்களை வைத்திருந்தார். அவர் என்னிடம், ‘நான் இப்போது லவ் ஸ்டோரீஸ் படங்களில் நடிக்க விரும்புகிறேன். அப்படி எதும் கதை இருக்கிறதா?’ என கேட்டார். அந்த சமயத்தில் விஜய் அழைத்தார். ‘வேலாயுதம்’ படத்தில் பிஸியாகிவிட்டேன்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in