

'அஞ்சான்' படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படத்திற்கு 'மாஸ்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வால், சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'அஞ்சான்' படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை யு.டிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'அஞ்சான்' படத்தின் இசை வெளியீடு, ஜூலை 17-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.
இப்படத்திற்கு 'மாஸ்' என தலைப்பிட்டு இருக்கிறார்கள். யுவன் இசையமைக்க, ப்ரவீன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு பூஜை போடப்பட்டுவிட்டது. விரைவில் படப்பிடிப்பு துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.