‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்

‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவன விளம்பரத் தூதராக சமந்தா நியமனம்
Updated on
1 min read

சென்னை: நடிகை சமந்தா ‘மையோசைடிஸ் இந்தியா’ தொண்டு நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனம் அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாற்றத்தின் புதிய முகத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மையோசைடிஸ் இந்தியாவின் புதிய பிராண்ட் அம்பாசிடராக சமந்தாவை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மையோசைடிஸ் நோயுடன் போராடிக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், நம்பிக்கையை விதைக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இணைந்து முன்னேறுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தாவை பொறுத்தவரை அவர் மையோசைடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக சினிமாவிலிருந்து சின்ன ப்ரேக் எடுத்துள்ள சமந்தா தாயாருடன் அமெரிக்கா சென்று, அங்கு சில காலம் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, முழுவதும் குணமடைந்த பின் இந்தியா திரும்புவார் எனக் கூறப்படுகிறது. அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குஷி’ திரைப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in